ஒழுக்கத்தை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை!

Thursday, September 22nd, 2016

நாடாளுமன்றத்தில் ஒழுக்கங்களை மீறி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்ற விவாதங்களின் போது உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து பொதுமக்கள் விமர்சனங்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே தகுந்த வார்த்தை பிரயோகங்களை உபயோகப்படுத்தி நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்குமாறும் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அத்துடன் நாடாளுமன்ற ஒழுக்கங்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Karu-Jayasuriya-620x330

Related posts: