ஒலிம்பிக் சங்கத்துடன் வேலை செய்யும்படி கிரிக்கெட் விளையாடும் அமைச்சர்கள் கூறமுடியாது!

Friday, September 30th, 2016

சிலர் கூறுவதுபோல் வீர, வீராங்கனைகளை இலங்கையில் இருக்குமாறு கூறினால் இலங்கையில் விளையாட்டுத்துறை இது இல்லாமல் போய் விடும். அதைப்பற்றி அறியாதவர்களே விமர்சனம் செய்கின்றார்கள். ஆகவே நாம் வீரர்களுக்கு முடிந்தவரை சர்வதேச போட்டிகளில் பங்குகொண்டு அனுபவங்களைப் பெற சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அப்போது தான் எதிர்க்காலத்துக்கு முகங்கொடுக்கக் கூடிய சக்தியைப் பெறுவார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வியட்நாமில் நடைபெறவுள்ள ஐந்தாவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற சென்ற இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக 20ம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை வியாட்நாமில் நடைபெறவுள்ள ஐந்தாவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் எமது வீர, வீராங்கனைகளுக்கு மிக முக்கியமானது. திறைமை மிகுந்த வீர, வீராங்கனைகள் உலக அணிகள் பல இம்முறை போட்டிகளுக்கு நாம் அனுப்பவுள்ளோம். இவ்விழா எமது வீர, வீராங்கனைகளுக்கு புதிய அனுபவங்களை பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒன்றாகும். நாம் அவர்களுக்கு வெளிநாட்டு அனுபவங்களை பெற்றுக்கொடுக்காமல் தங்கப் பதக்கங்களை எதிர்பார்ப்பது தவறாகும்.

கபடி விளையாட்டை இலங்கையில் மாத்திரம் விளையாடிக்கொண்டிருந்தால் சர்வதேசத்தை வெற்றிகொள்ளும் திறமை வாய்ந்த வீர, வீராங்கனைகள் உருவாகமாட்டார்கள். இலங்கை கபடி வீர, வீராங்கனைகளை நாம் இந்தியாவில் கபடி விளையாட்டுக்கு அனுப்பினோம். அதேபோல் கடற்கரை கரப்பந்தாட்டம் கடற்கரை கைப்பந்து, மரதன், ஸ்விம்மில், செம்போ, ஜூட்சூ, இலங்கைக்கு புதிய விளையாட்டுகளாக இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விளையாடும் விளையாட்டு மூலம் முன்னேறும் திறமைக்கொண்ட அணியினரை நாம் அறிந்துகொண்டு அவர்களை வெளிநாட்டு போட்டிகளுக்கு அனுப்பி இலங்கைக்கு புகழையும் கீர்த்தியையும் பெற்றுத் தரவே நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நாம் அதற்காக விசேட நடவடிக்கைகளை எமது சக்தியின் மூலம் எடுத்து வருகின்றோம்.

ஒலிம்பிக் சங்கத்தின் நடவடிக்கை தொடர்பாக கடந்த காலங்களில் நாம் 40 அதிகமானவர்களை ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு அனுப்பினோம் என்று பிரச்சினைகள் ஏற்பட்டது. நாம் அமைச்சினூடாக 28 பேரையே அனுப்பினோம் 09 பேர் வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள் 09 பேர், ஊடகவியலாளர்கள், 06 பேர், அமைச்சை சேர்ந்த 04 பேர் ஒலிம்பிக் சங்கம் அவர்களின் மானியம் மூலம் சிலரை அனுப்ப முடியும்.

அது விளையாட்டு அமைச்சுக்கோ விளையாட்டு அமைச்சருக்கோ சம்பந்தம் இல்லாதது அதற்கு என்னை குற்றம் கூற முடியாது. ஒலிம்பிக் சங்கத்திடமே அதைப்பற்றி விசாரிக்க வேண்டும். ஒலிம்பிக் சங்கத்தோடு வேலை செய்யும் வீதம் பற்றி கிரிக்கெட் விளையாடும் அமைச்சர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் கிரிக்கட்டை பற்றி மட்டுமே அறிவார்கள்.

நிறுவனம் ஒன்றை நிர்வாகம் செய்தவர்கள் அல்ல. அவர்கள் ஒலிம்பிக் சங்கம் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்க வேண்டுமென எண்ணுகின்றார்கள். சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் சட்டங்களை வாசித்த அமைச்சர்கள் யாரும் இவ்வாறான குற்றச்சாட்டுகளை கூறமாட்டார்கள். அச் சட்டத்தின் படி எந்தவொரு நாட்டினதும் ஒலிம்பிக் சங்கம் சுயாதீனமாகவே இயங்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு இருக்க கூடாதென தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பாக ஒலிம்பிக் சங்கத்துடன் சண்டைபிடித்து சர்வதேச ரீதியில் அபகீர்த்திக்கு உள்ளாகி இலங்கைக்கு விளையாட்டுத் தடை விதிக்கப்பட்டால். அதற்கு பொறுப்புக் கூறவேண்டிய விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவாகும்.

நான் இது தொடர்பாக சிந்தித்து செயலாற்றுபவன். மற்றவர்கள் கூறுவது போல் செயலாற்றுபவன் அல்ல. எனக்கு சர்வதேச மற்றும் இலங்கையின் ஒலிம்பிக் சட்டங்கள் பற்றித் தெரியும். நான் அந்த தெரிவுடனேயே நடவடிக்கையில் ஈடுபடுகின்றேன். விளையாட்டு போட்டிகளுக்காக ஒலிம்பிக் சங்கம் பிழையான ஒருவரின் பெயரை குறிப்பிட்டிருந்தால் நான் அதற்கு அனுமதிக்கமாட்டேன்.

அந்த நடவடிக்கையில் மாத்திரம் என்னால் தலையிட முடியும். எதிர்காலத்தில் தேவையேற்பட்டால் ஆசிய விளையாட்டுகள் தொடர்பாக சங்கம் ஒன்றை உருவாக்க எண்ணியுள்ளோம். ஆசிய விளையாட்டு போட்டித் தொடர்பாக அமைச்சு முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதற்காக ஒத்துழைப்பை வழங்கி அனைத்தையும் சரியாக நிறைவேற்றியது.

நாம் இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு கூறுகின்றோம் நாம் வழங்கும் ஒத்துழைப்பை சரியாகப் பயன்படுத்தி தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு நாட்டிற்கு புகழையும் கௌரவத்தையும் கொண்டுவரும் வகையில் திறமையை வெளிக்காட்டுங்கள். பதக்கங்களை பெற்றுக்கொள்ள முடிந்தளவு அர்ப்பணிப்பைச் செய்யுங்கள்.

இம்முறை போட்டிகளில் கடற்கரை கபடிக்காக 15 பேரும் கடற்கரை கரப்பந்தாட்டத்துக்காக 12 பேரும், கடற்கரை கைப்பந்துக்காக 12 பேரும் மரதன் ஸ்விம்மில்குக்காக 05 பேரும், செம்போவுக்காக 05 பேரும் ஜூட்சூக்காக 03 பேரும் வைத்தியர் ஒருவரும் உடற்கூற்று நிபுனருமாக 54 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். இந்நிகழ்வுக்கு விளையாட்டு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் டீ.எம்.ஆர்.பீ. திஸாநாயக்கவும், விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் சமன் பண்டார உள்ளிட்ட விளையாட்டு அமைச்சு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.

00col153611904_4792977_22092016_aff_gry

Related posts: