ஒலிபெருக்கிப் பாவனையில் கட்டுப்பாட்டைப் பின்பற்றுக!
Tuesday, June 12th, 2018வலி. தென் மேற்குப் பிரதேசத்தில் ஒலிபெருக்கிப் பாவனை அதிகரித்துள்ளமையால் மாணவர்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர்.
எனவே அவர்களின் நலன்கருதியும் சூழலைக் கருத்தில் கொண்டும் ஒலிபெருக்கிப் பாவனைக்கு அனுமதி வழங்கும்போது கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு வலி. தென்மேற்கு பிரதேச சபை மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கோரியுள்ளது.
ஆலயங்களில் இடம்பெறும் திருவிழாக்களின் போது ஒலிபெருக்கிகளின் பாவனைகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றார்கள். இது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மக்களின் நலன்கருதி ஒலிபெருக்கிப் பாவனைக்கு அனுமதி கொடுக்கும்போது சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து அத்தியாவசியமாக ஒலிபெருக்கிப் பாவனை தேவைப்படும் இடப்பரப்பு எல்லையையும் பாவனை நேரத்தையும் வரையறுத்துக் கொடுப்பதுடன் ஒலிபெருக்கியால் எழுப்பப்படும் ஒலி சூழலைப் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை வழங்குவது சிறந்ததாக இருக்கும் என்பதால் மேற்படி விடயங்களை அனுமதி கொடுக்கும் போது கருத்தில் கொள்ளுமாறு பிரதேச சபை கோரியுள்ளது.
Related posts:
|
|