ஒற்றையாட்சி ஊடாகவே தீர்வு : அதற்கப்பால் ஐ.தே.க. நகராது – பிரதமர்!
Wednesday, December 19th, 2018ஒற்றையாட்சித் தீர்வுக்கு அப்பால் ஐக்கிய தேசியக் கட்சி நகராது என சமஷ்டி கோரும் த.தே.கூ. ஆதரவோடு ஆட்சியமைத்த ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தேசிய முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணி ஊடாக அரசியல் பணிகள் தொடரும் எனவும் அவர் அறிவித்தார்.
மேலும் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குங்கள். அடுத்த நிமிடமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் எனவும் இதன்போது ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனேயே ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது. ரணில் பிரதமராகியுள்ளார். ஆனால் ஐ.தே.முன்னணி ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சமஷ்டித் தீர்வையே வலியுறுத்தி வருகிறது.
தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைத் தெளிவாகக் கூறியுள்ளது.
இந்நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணாக அவர்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்த ரணில் ஒற்றையாட்சி அடிப்படையில்தான் தீர்வு, அதற்கப்பால் ஐ.தே.கட்சி நகராது என உறுதியாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|