ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தல் –  பிரதமர்!

Monday, September 4th, 2017

எதிர்வரும் ஆண்டில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

குருணாகல் – மாங்குருஓயா வத்த பிரதேசத்தில் புதிய தேசிய பாடசாலையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

20ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஒரே நாளில் அனைத்து மாகாணசபைத் தேர்தல்களையும் நடாத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.எனினும், மாகாணசபைத் தேர்தல்களை ஒத்தி வைக்காது துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன

Related posts: