ஒரே நாளில் இம்முறை உள்ளூராட்சி தேர்தல் : 3 இலட்சம் பணியாளர்கள் தேவை – மஹிந்த!

mahinda-deshapriya-575-01 Thursday, December 7th, 2017

ஒரே நாளில் நடந்த எதிர்பார்த்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு சுமார் 400 கோடி ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு; இலங்கையின் வரலாற்றில், உள்ளூராட்சித் தேர்தல் நாடெங்கும் ஒரே நாளில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தத் தேர்தலில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பணிகளுக்கு 3 லட்சம் அரச பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். நாடெங்கும் சுமார் 14 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அரசியல் கட்சிகளின் தேர்தல் பயன்பாடுகளுக்கு என அரச சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு டிசெம்பர் 4 ஆம் திகதி தொடக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

அரச சொத்துக்களையோ, மத வழிபாட்டு இடங்களையோ தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.தேர்தல் முடியும் வரை அரசாங்க நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு, தேவையான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கியதாக, வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு கோடியே 50 லட்சம் வாக்காளர் அட்டைகள், ஜனவரி மூன்றாவது வாரத்தில் வாக்காளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


நீர்வேலி வடக்குப் பகுதியில் இருவரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச் சாட்டில்  11 பேர் கைது
யாசகர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை பெற்றுத்தரப்படும்! - மஹிந்த தேசப்பிரிய!!
பாடசாலை சீருடையின் வர்ணம் மாறுகின்றது!
மின்சாரத்தை மிக சிக்கனமாக பயன்படுத்தவும் - மின்சக்தி அமைச்சர்!
நல்லூர் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்திற்கு பொது மக்கள் அஞ்சலி!