ஒரே சமயத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்!

Friday, December 1st, 2017

பெரும் இழுபறி நிலையில் இருந்தவந்த உள்ளாட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீளப்பெறப்படுகிறது. இதனூடாக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் சாத்தியம் உருவாகியுள்ளது.

மேலும் அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த மனுவை மீளப்பெறுவதாக மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.ஏற்கனவே 93 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பெப்ரவரி மாதம் முதல் வாரம் அளவில் இந்த அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

Related posts: