ஒரே இலக்கத்தில் இரு வாகனங்கள் – யாழ்ப்பாண விசாரணை பிரிவில் முறைப்பாடு!

Thursday, May 10th, 2018

ஒரு பதிவு இலக்கத்தில் இரு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

யாழ்ப்பாணம் வள்ளிக்கரையைச் சேர்ந்த அ.ஜான்சன் என்பவர் கண்டியில் உள்ள சியபத பினான்ஸ் நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் சிபிஜே ஆர் 4118 என்ற இலக்கத்தை உடைய டொல்பின் ரக வாகனமொன்றைக் கடன் அடிப்படையில் பெற்றுள்ளார்.

இவர் தன்னுடைய வாகன வரிப்பணத்தை கட்டுவதற்காக சென்றபொழுது இவருடைய பதிவு இலக்கத்தில் ஏற்கனவே பணம் கட்டப்பட்டு பதிவு இலக்கம் வெளியிடப்பட்டமை தொடர்பாக அறியப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றப் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரின் தீவிர விசாரணைகளில் இந்த இலக்கத்தில் டபிள்யூபிஜேஆர் 4118 கொழும்பில் வாகனமொன்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இரு வாகனங்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முதற் கட்ட விசாரணைகளில் கொழும்பு பதிவில் உள்ள வாகனப் பதிவே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கண்டிப் பதிவில் உள்ள வாகனம் ஏற்கனவே கை மாற்றப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சரியான குற்றவாளிகளை வெகு விரைவில் பொலிஸார் கைது செய்ய இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts:

நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை - மக்களது பூரண ஒத்துழைப்பே அவசியம் - இராணுவத் தளபதி கோரிக்கை...
பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை!
பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்க ஆலோசனை – ஜனாதிபதி தெரிவிப்...

வளமான எதிர்காலத்தை உருவாக்க  பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம் - ஈ.பி.டி.பி யின் யாழ். மாவட்ட நிர்வாக செய...
நோயாளர்களின் நலன்கருதி சாவகச்சேரி மருத்துவமனையில் அலைபேசியைப் பயன்படுத்த பணியாளர்களுக்குக் கட்டுப்பா...
பண்டங்களை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருத்திருக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படாத வகையி...