ஒரே இலக்கத்தில் இரு தேசிய அடையாள அட்டைகள்!

Wednesday, February 8th, 2017

ஒரே இலக்கத்தை கொண்ட இரண்டு அடையாள அட்டைகள் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் வேறு பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஒரே இலக்கத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த பெண் 2014ஆம் ஆண்டு வங்கியில் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவருக்கு அடையாள அட்டை இலக்கத்திற்கு வேறு ஒருவரின் பெயர் காட்டுவதாக கூறியுள்ளனர், அதன் பின்னர் அவர் ஆட்பதிவு திணைக்களத்திற்கு சென்று இரண்டு கடிதங்களை வழங்கியுள்ளார். மற்றைய பெண்ணுக்கும் இது தொடர்பில் அறிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் அண்மையில் உத்தரவாத கையொப்பமிடுவதற்கான சென்ற சந்தர்ப்பத்தில் அதே இலக்கத்தில் வேறு ஒருவரிடம் அடையாள அட்டை உள்ளதாக தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த பிரச்சினை காரணமாக குறித்த பெண்ணால் வங்கியில் கொடுக்கல் வாங்கல் மற்றும் கடன் வசதிகள் எதுவும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை விரைவில் பெற்ற தருமாறு இரண்டு பெண்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

Related posts: