ஒரேநாளில் 1451 கொரோனா தொற்றாளர்கள் பதிவு !

Thursday, April 29th, 2021

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,466 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களென்றும் எஞ்சிய 1,451 பேரில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் இதுவரையில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 953 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 95 ஆயிரத்து 83 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அதேநேரம் நேற்றையதினம் மேலும் கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 661 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: