ஒரேநாளில் 103 ஆண்கள் உள்ளிட்ட 167 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Tuesday, August 17th, 2021

நாட்டில் கொரோனா வைரஸினால் மேலும் 167 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 263 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இறுதியாக 103 ஆண்களும் 64 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 3 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 58 ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 12 ஆயிரத்து 57 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 40 ஆயிரத்து 288  பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: