ஒரு வார காலத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த தனியார் வங்கிகள் தீர்மானம்!

Monday, June 7th, 2021

நாட்டில் உள்ள முக்கிய வணிக வங்கிகள் சில இன்றுமுதல் ஒரு வார காலத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொமர்சியல், சம்பத், செலான், DFCC, நேஷன் டிரஸ்ட், அமானா மற்றும் யூனியன் வங்கிகளில் இவ்வாறு சாதாரண வங்கி சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாளை (08) மற்றும் நாளைமறுதினம் (09) ஹட்டன் நெஷனல் வங்கியின் கிளைகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: