ஒரு வாரகாலத்தின் பின் வடக்கிற்கு தபால் ரயில்கள்

Sunday, December 17th, 2017

!

கடந்த ஒரு வார காலத்தின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான தபால்களுடன் தபால் ரயில் யாழ்.நகர் வந்தடைந்தது.

ரயில்வே ஊழியர்களின் பணி புறக்கணிப்பால் வடக்கிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனால் குடாநாட்டிற்கான தபால்கள் யாவும் யாழ்.பிரதம தபாலக வாகனம் மூலம் அநுராபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கிருந்து அதே வாகனம் மூலம் தபால் பொதிகள் இங்கு எடுத்து வரப்பட்டு தபால்கள் வழமை போன்று விநியோகிக்கப்பட்டது.

இதன் காரணத்தினால் தபால் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று யாழ்.பிரதம தபாலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

என்றாலும் கடந்த ஏழு நாட்களின் பின்னர் கொழும்பில் இருந்து தபால் ரயில் தபால் பொதிகளுடன் நேற்று காலை யாழ்ப்பாணம் வந்தடைந்தது.

Related posts: