ஒரு வருட சிறைவாசத்திற்குப் பின்னர் அனுர பிணையில் விடுதலை!

முன்னாள் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காக,அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், ஒரு வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுர சேனாநாயக்கவுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைகளுக்காக சென்றிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையை வந்தடைந்தார்!
மின்சார தடை - 8 மணித்தியாலத்தில் 100 கோடி ரூபாய் நட்டம் - இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!
|
|