மூன்று வயது குழந்தை வெட்டிக்கொலை – யாழ்ப்பாணத்தில் கொடூரம்!

Friday, January 19th, 2018

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் தனது தாயாரையும் பெறா மகளையும் கோடரியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார்

இதில் மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததுடன் தாயார் படு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட நபரும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்

வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது பத்திரகாளி வீதியில் உள்ள குணரத்தினம் என்பவருடைய மகனான ஈஸ்வரன் எனும் முப்பத்து மூன்று வயதுடைய நபர் வீட்டில் இருந்த அவருடைய தாயார் மற்றும் அவரது தம்பியின் பிள்ளை ஆகியோரை கோடரியால் வெட்டியதாக முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது

சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன் கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மேலும் குறித்த கொலையாளியான ஈஸ்வர் தானும் நஞ்சை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் இச்சம்பவத்தில் மூன்றுவயதுடைய தனுசன் நிக்சையா கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் 55 வயதுடைய பரமேஸ்வரி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அத்துடன் இந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டவரான முப்பத்து மூன்று வயதுடைய ஈஸ்வரன் என்பவரும் நஞ்சருந்நி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியல் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts: