ஒரு லீற்றர் பாலின் விலை 120 ரூபாவரை அதிகரிக்கப்பட வேண்டும் – பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் கோரிக்கை!

Sunday, October 17th, 2021

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லீற்றர் பாலுக்கான விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றமை போதுமானதாக இல்லையென பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் சுசந்த குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறைந்தபட்சம் ஒரு லீற்றர் பாலின் விலை 120 ரூபாவரை அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து வெவ்வேறு பகுதிகளில் மாறுபட்ட விலைகளில் பால் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நாடு முழுவதும் பாலுக்கு ஒரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை உள்நாட்டு பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு மில்கோ மற்றும் பெல்வத்த ஆகிய பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுத்து, பால் உற்பத்தியாளர்களுக்கான விலை போதுமானதாக இல்லையென்ற, பால் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதற்கமைய உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்காக செலுத்தப்படும் விலை லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

எதிர்வரும் முதலாம் திகதிமுதல் இந்த அதிகரிப்பு அமுலுக்குவரும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

\000

Related posts: