ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம்!

Friday, July 5th, 2019

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் வரை, 1,008,449 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இதில் 97,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சீனாவில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பயணிகள் இந்தியா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் மாலைதீவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை கடந்த ஏப்ரல் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளின் வருகை 57 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும் இலங்கைக்கு விஜயம் செய்யும் சீன பயணிகளின் தடை நீக்கப்பட்ட நிலையில், அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: