ஒரு மாவட்டத்திலிருந்து இன்னுமொரு மாவட்டத்திற்கு சென்று குடியேறுவதற்கான தடை தொடர்ந்தும் அமுலில் – பொலிஸார் அறிவிப்பு!

Tuesday, April 21st, 2020

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி தமது அன்றாட பணிகளை நிறைவேற்றி கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்

அதேவேளை பொது மக்கள் சமூக இடைவெளியைப் பேணுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்;

அத்துடன், ஒரு மாவட்டத்திலிருந்து இன்னுமொரு மாவட்டத்திற்கு சென்று குடியேறுவதற்கான தடை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊரடங்கு சட்டம் தொடர்பில் இலங்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: