ஒரு மணி நேரத்தினால் வீதி விளக்குகள் எரிவது தாமதிக்கும் – மின்சார சபை!

Friday, January 20th, 2017

நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வாக வீதி விளக்குகள் எரிய விடுவதை ஒரு மணி நேரத்தினால் தாமதப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை சகல நகர சபைகளுக்கு அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட இதனை அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தற்போது மாலை 5.30க்கு எரிய விடப்படும் மின் விளக்குகள் இன்றையதினம் முதல் மாலை 6.30க்கு எரியவிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் ஏந்தும் பிரதேசங்களில் உள்ள நீர்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால், நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

lights

Related posts: