ஒரு பில்லியன் டொலரை எட்டும் இலக்குடன் இலங்கை – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை!

Sunday, August 15th, 2021

நாட்டின் பொருளாதாரத்திற்காக ஒரு பில்லியன் டொலரை ஈட்டிக்கொள்ளும் இலக்கை நோக்கி பயணிப்பதாக, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடைபெற்ற நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

சர்வதேச நிதியத்திடமிருந்து விசேட உதவியாக 800 மில்லியன் டொலர் எமக்கு கிடைக்கவுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் நாம் புதிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். அதேநேரம் பயிற்சியுடன் கூடிய பயன்பாட்டு வளம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம்.

மேலும் எம்மிடம் குறிப்பிடத்தக்களவு வளம் உள்ளது. அதனூடாக, 400 மில்லியன் டொலரை ஈட்டுவதற்கும் எதிர்பார்க்கிறோம்.

இந்நிலையில் நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் சரியாக இடம்பெற்றால், ஒரு பில்லியனை ஈட்ட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: