ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடனாக பெற் நடவடிக்கை – இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் – உயர்மட்ட பேச்சுக்களுக்கும் ஏற்பாடு!

Tuesday, November 30th, 2021

கடன் அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இந்தியா பயணிக்கவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகிள்ளன.

இதன்படி, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ எதிர்வரும் மாதம் இந்தியா பயணிக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, நிதி அமைச்சர், இந்திய பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, இந்திய முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் நிதி அமைச்சர் முன்னெடுப்பார் என கூறப்படுகின்றது.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: