ஒரு நிறுவனத்திலிருந்து எழுத்துமூல விசாரணைக்கு இன்னுமொரு நிறுவனம் 14 நாட்களுக்குள் பதில் அளிக்காதுவிட்டால் அதை ஏற்றுக்கொண்டதாக கருதி மக்களுக்கு பதில் கூறுங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, September 27th, 2020

அரச அதிகாரிகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது மக்கள் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்குவதே ஆகும். அதற்காக மக்களின் பக்கம் நின்று சரியான மற்றும் தைரியமாக முடிவெடுக்கக்கூடிய அதிகாரிகளை நான் பாதுகாப்பேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க அரச நிறுவனங்கள் நீண்டகாலத்தை எடுக்கின்றன. ஒரு நிறுவனத்திலிருந்து எழுத்துமூல விசாரணைக்கு இன்னுமொரு நிறுவனம் 14 நாட்களுக்குள் பதில் அளிக்காதவிடத்து அவ் எழுத்து மூல வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாக கருதி மக்களுக்கு பதில் கூறுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கொழும்பு – மட்டக்களப்பு வீதியில் 35 கிலோமீற்றர்களை கொண்ட பெரகல – வெள்ளவாய பகுதி, கெலிபனாவெல, ஹால்கன்ன வீதியின் வௌ்ளவாய வரையான பகுதி, 100 ஏக்கர் கக்குட்டு அராவ மத்திய வீதி, தெஹிலந்த – அளுத்வெலயை இணைக்கும் வீதி மற்றும்கிளை வீதிகளை துரிதமாக நிர்மாணித்து நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரிய காணிகள் தொடர்பாக மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு உரிமம் மற்றும் உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் துறைசார் தரப்பினருக்கு  ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: