ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானம்!

Sunday, June 12th, 2022

ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பலர் இந்த நாட்களில் வருவதே இதற்குக் காரணம என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் ஒரு நாளின் அடிப்படையில் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் சராசரி எண்ணிக்கை சுமார் 2,000 ஆகும். அந்த எண்ணிக்கையை 3,500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர்களை இரண்டு பணி நேரங்களின்  கீழ் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த இரண்டு பணி நேரங்களும் காலை 7 மணிமுதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணிமுதல் இரவு 10 மணி வரையும் செயல்படும்.

இதேவேளை, நாளை (13) வழமை போன்று திறக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை 13ஆம் திகதி விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகள் இடையூறு இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக திணைக்களம் திறந்திருக்கும்.

அதன்படி, திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகம் நாளை திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: