புதியவர்களை உள்வாங்குவதும் மாற்றங்களை உருவாக்குவதும் அவசியம் – கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கி.பி தெரிவிப்பு!

Saturday, February 25th, 2023

காலச் சுழற்சிக்கு ஏற்ப புதியவர்களை உள்வாங்குவதும் மாற்றங்களை உருவாக்குவது அவசியமாகும் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் இனி வருங்காலம் சிறப்பானதாக அமைய ஒன்றுபட்டு உழைப்போம் எனவும் தெரிவித்துளளார்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட கட்சியின் பிரதான நிர்வாக பொறுப்பாளர்கள்  கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவிக்கையில் –

தலைவர் டக்ளஸ் தேவானந்த அவர்களின் அயராத உழைப்பின் பிரதிபலனே ஈ.பி.டி.பியின் அசூர வளர்ச்சி கண்டது. அதேநேரம் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருக்களை  மக்களுக்கான பணிகளை தோழர்களாகிய நாம் ஒன்றுபட்டு உழைத்து  செயலுருவில் காட்டி வருகின்றோம். இதுவே எமது கட்சியின் பலமும்கூட.

அத்தகைய ஓர் இறுக்கமான கட்டமைப்பை கொண்ட எமது கட்சியின் செயற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு அதை மக்களுக்கானதாக கொண்டு செல்ல தொடர்ந்து பயணிப்பதே எமது நோக்கமாக இருந்துவருகின்றது.

இந்நேரம் சக தமிழ் கட்சிகளிடமிருந்து ஈ.பி.டி.பி தனித்துவமாக வேறுபடுவதற்கான காரணம்  ஆரம்பம்முதல் இன்றுவரை ஒரு தலைவரின் வழிநடத்தல் என்பது மட்டுமல்லாது நாங்கள் பேசியது ஒரே கொள்கை ஒரே நடைமுறை அதுவே இன்று ஏனையவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழி முறையாக  அமைந்துள்ளது.

இதேநேரம் விமர்சனம் என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போதுதான் சிறப்பான ஓர் அடைவு மட்டத்தை எட்ட முடியும்.

அத்துடன் சமூகத்திலுள்ள அனைத்து கட்டமைப்புகளையும் பேதங்கள் இன்றி ஒன்றிணைத்து மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு செயற்றிட்டங்களை முன்னெடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்திய தேசிய அமைப்பாளர், நாம் மக்களுக்கானவர்களாக இருக்குபோதுதான் மக்களையும் எமக்கானவர்களாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியதுடன் அதையே நாம் தொடர்ந்தும் முன்னெடுத்தும் வருகின்றோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: