ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதிசெய்ய விசேட கலந்துரையாடல் – லிட்ரோ தலைவர் தெரிவிப்பு!
Thursday, June 16th, 2022எதிர்காலத்தில் ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
லிட்ரோ எரிவாயு விலையை 210 ரூபாவால் அதிகரிப்பதற்கான அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு கிடைக்கும் எரிபொருள் தாங்கிய இறுதி கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது. அந்த கப்பலில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இதேவேளை இன்று (16) சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப் போவதில்லை என லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் ஊடக வெளியீட்டாளர் வி. கேதேஸ்வரம் டொலர்களை செலுத்தி கப்பலில் இருந்து 3,900 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அத்தியாவசிய சேவைகளுக்காக அதிகளவு எரிவாயு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே லிட்ரோ நிறுவனம் கடந்த 4 ஆம் திகதி முதல் தொடர்ந்து 13 நாட்களாக உள்நாட்டு எரிவாயுவை வழங்காததால், விநியோகம் இல்லாத நிலைகாணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|