ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!

Wednesday, June 24th, 2020

நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்த இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நாட்டில் இனங்காணப்பட்டிருந்தனர். அதன்படி, இதுவரை இலங்கையில் 1991 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 29 பேர் இந்தியாவின் மும்பையில் இருந்து வந்தவர்கள் எனவும் ஏனைய 11 பேரும் அமெரிக்காவில் இருந்து வருகைத் தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேபோல் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 22 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

ஐ.டி.எச், வெலிகந்த, காத்தான்குடி, ஹோமாகம மற்றும் தெல்தெனிய ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த தொற்றாளர்கள் சிலரே இவ்வாறு குணமடைந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 1548 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர். மேலும் 432 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: