ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு : ஏனையவர்களையும் விரைவில் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

தொறில்வாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதே எமது அரசின் நோக்கமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விரைவில் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு திட்டத்தில் எஞ்சியவர்களையும் ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர வேண்டும் என்பதுதேர்தல் காலத்தில் என்னிடம் முன்வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கையாகும்.
அதனடிப்படையில் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே, அப்போது தொழில்வாய்ப்பு இல்லாதிருந்த 65 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச தொழில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதற்கு மேலதிகமாக, சாதாரண தரம் சித்தியடையாத, பொருளாதார ரீதியாக கீழ் மட்டத்தில் இருந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்களை வழங்குவதற்கும் நாம் திட்டமிட்டது.
அதன் முதற்கட்டத்தின் கீழ், தற்போது 35 ஆயிரம் இளைஞர், யுவதிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்களுக்குப் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சியின் நிறைவில் இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலை பணியாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அத்துடன் எதிர்காலத்தில் ஏனையவர்களையும் விரைவாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|