ஒரு அதிகாரி, இரண்டு பதவிகள் இரண்டு சம்பளங்களை பெறமுடியாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Monday, June 19th, 2023
இலங்கையிலுள்ள ஒரு அதிகாரி, இரண்டு பதவிகள் அல்லது இரண்டு சம்பளங்களை பெறுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கப்போவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற அதிகாரியாக இருந்தாலும் இரண்டு சம்பளங்களை பெறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார் என்றும் என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரி ஒருவர் நாடாளுமன்ற விசேட குழுவொன்றில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, இரண்டு சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகளை பெற்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
எவரும் அச்சமடைய வேண்டாம், இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்க மாட்டோம்.
ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரி ஒருவர் நாடாளுமன்ற விசேட குழுவொன்றில் உயர் பதவிக்கு நியமிக்கப்படும் போது நாடாளுமன்ற
பணியாளர் ஆலோசனைக் குழுவிடம் ஒப்புதல் பெறுவது அவசியம்.
நிதி அமைச்சகத்தின் சார்பில் அந்த ஆலோசனைக் குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன்.
முன்பு ஒரு பிரச்சனை இருந்தது. நாடாளுமன்றத்தில் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக. ஆனால் அதற்கு நாங்கள் இடம் கொடுக்கவில்லை.நாடாளுமன்றம் ஒரு சிறப்பு அமைப்பு.
ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த சட்டங்களும் நிதி ரீதியாக அனைவருக்கும் முக்கியம் என்பதால் அந்த நேரத்தில் நாங்கள் அந்த அனுமதியை வழங்கவில்லை.
எனவே நான் மிகவும் பொறுப்புடன் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நிதி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், ஒரு நபருக்கோ, அல்லது ஒரு அதிகாரிக்கோ இரண்டு சம்பளம், இரண்டு பதவிகள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
|
|