ஒருவர் இருந்தாலும் மலசலகூடம் கட்டாயம் : புள்ளிகளை விடுத்து அமைத்துத்தாருங்கள் !

Thursday, April 4th, 2019

குடும்பத்தில் ஒருவர் மட்டும் இருந்தால் கூட அவருக்கு மலசலகூட மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும், ஒருவருக்கு என்றால் மலசல கூட வசதி தேவையில்லை என்று அவரை விட்டுவிட முடியாது. இதனால் அந்த நபர் மிகவும் பாதிப்படைவார் என்ற பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடக்குப் பெண்கள் சமாசத்தின் கலந்துரையாடலிலேயே இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

அந்தக்கலந்தரையாடலில் –

புள்ளிகள் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டே வீட்டுத்திட்டங்கள், மலசல கூட வசதிகள் வழங்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் இருவர் மட்டும் தான் உள்ளனர் என்றால், அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எமது கிராமத்தில் ஒரு குடும்பத்தில் இருவர் மட்டுமே உள்ளனர். அவர்கள் தினமும் வீடு வீடாகச்சென்று மலங்கழிக்கின்றனர்.

இந்த அவல நிலை யாருக்கும் வரக்கூடாது. வீடு இல்லை என்றால் கூட பரவாயில்லை, மலசலகூடம் இல்லை என்றால் என்ன செய்ய முடியும். அவர்கள் மிகவும் வறுமைப்பட்டவர்கள். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் வீடு வீடாகச் செல்கின்றனர்.

இதைப்பார்த்தால் அழுகைதான் வரும். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள், மிருகங்களைப்போன்று திரிகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு கட்டாயம் மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் என்றனர்.

Related posts: