ஒருமித்த செயற்பாடே அவசியம் – ஜனாதிபதி!

மக்கள் பிளவடைந்து தனித்தனியாக செயற்பட்டால், நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒழுக்கப் பண்பாட்டையும் அமைதியையும் கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும்.
நாட்டில் இன ரீதியாக பிரிந்து வேறுபட்டு பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வது எந்தவொரு இனத்திற்கும் நல்லதல்ல. நாட்டின் அனைத்து இனங்களும் சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் வாழக்கூடிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களது பதவி மாற்றங்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு
குற்றவாழிகள் எந்த பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவர் - புதிய கடற்படை தளபதி!
இலங்கையிலுள்ள சவுதி அரேபிய மக்களுக்கு அந்நாட்டு அரசு விசேட அறிவிப்பு!
|
|