ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தப்படலாம் என்று தொடர்ந்து நினைவூட்டப்பட்ட போதிலும் பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், பூஸ்டர் டோஸ் பெறும் நபர்களின் சதவீதம் 50 சதவீதமாக இருக்கும் என்று தாங்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அந்த சதவீதம் 20 சதவீதமாக உள்ளதாக தெரிவித்தார்.
எனவே, கட்டுக்கதைகளை நம்பாது பூஸ்டர் டோஸை கூடிய விரைவில் பெறுமாறு அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போதைக்கு கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே வைரஸ் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஜுட் ஜயமஹ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நாளுக்கு நாள், கிழமைக்கு கிழமை மற்றும் மாதாந்தம் காணப்படுகின்ற நிலைமை குறித்து ஆராய்ந்தே, எதிர்கால தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் பண்டிகை காலம் என்பதனால், தற்போதிருந்தே, மிக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பில், தம்மால் தற்போதே கூற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|