ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 5 வருடங்களுக்கு அதிகமான அனுபவமுள்ள அனைவருக்கும் நிரந்தர நியமனம் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!

இலங்கை போக்குவரத்து சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 5 வருடங்களுக்கு அதிகமான அனுபவமுள்ள அனைத்து ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, நீண்டகாலமாக நிலவிவரும் சாரதி ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்வரும் மே மாதத்தில் உரிய பரீட்சையை நடாத்தி இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
நாடு பூராகவும் காணப்படும் உப சாலைகளை பேருந்து தரிப்பிடங்களாக மட்டும் பயன்படுத்துவதற்கும், அவை தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை பிரதான சாலைகள் ஊடாக மேற்கொள்வதற்கும் அதன் மூலம் நாடு பூராகவும் பேருந்து போக்குவரத்தை முறைமைப்படுத்தவும் வினைத்திறனான சேவையாக மாற்றுவதற்கும் அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
நகர்ப்புற வாகனங்களை கையாள்வது தொடர்பான முடிவுகளை எடுக்கும் உள்ளூராட்சி போக்குவரத்துக் குழுக் கூட்டங்களில் போக்குவரத்து அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி ஒருவரின் பங்குபற்றலின் முக்கியத்துவத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.
000
Related posts:
|
|