ஒன்று கூடினால் விளைவுகள் பாரதூரமான விழைவுகள் ஏற்படும் – ஜனாதிபதியிடம் சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Monday, June 15th, 2020

மிக விரைவில் பரவக் கூடிய கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் மக்கள் ஒன்று கூடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டால் அது சுகாதாரத்துறைக்கு பாரதூரமான நெருக்கடியை ஏற்படுத்தும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் தொடர்பில் சுகாதார துறையினர் ஜனாதிபதியிடம் இவ்வாறு தெளிவுப்படுத்தியுள்ளனர்.

பெரஹெராக்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து இந்த கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடல் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா தெரிவிக்கையில்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பெரஹெராக்களை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.  இதன் போது தளதா மாளிகை மற்றும் கதிர்காமத்தில் ஏற்பாடு செய்யப்படும் பெரஹெராக்கள் பற்றி விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன் போது பாரியளவில் பெரஹெராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மக்கள் ஒன்று கூடுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்று சுகாதாரத்துறையினர் உறுதியாகக் தெரிவித்துள்ளனர்

இது மக்களின் சுகாதார பாதுகாப்பில் பெறும் பங்கு வகிக்கும் காரணியாகும். எதிர்பாராத விதமாக கொவிட் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இவற்றில் கலந்து கொண்டால் கூட நாட்டில் பெருமளவான மக்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதையும் சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டினர்.

மிக விரைவில் பரவக் கூடிய இந்த வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் மக்கள் ஒன்று கூடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டால் அது சுகாதாரத்துறைக்கு பாரதூரமான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதையும் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியது.

அதற்கமைய இந்த கலந்துரையாடலில் மத பேரணிகள் அல்லது பெரஹெராக்களில் இடம்பெறும் மத வழிபாடுகள் நிச்சயமாக முன்னெடுக்கப்பட வேண்டும். எனினும் இவற்றுக்கு மக்களுக்கு அனுமதியளிக்கப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: