ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிடுகின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
Sunday, January 29th, 2023ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தின் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார்.
முன்பதாக ஜனவரி 27 ஆம் திகதி நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோப் குழு மற்றும் கோபா குழு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குழுக்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
அத்தகைய குழுக்களுக்கான உறுப்பினர்கள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தால் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் எனபதும் குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புதிய நாடாளுமன்ற அமர்வில் 125 உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி - சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் ஆலோசனை...
கடந்த இரண்டு ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு பாதிப்பு இரு மடங்கு அதிகம் - காய்ச்சலுக்கு பராசிட்டமோல் த...
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகரால் யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப்...
|
|