ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று!

Thursday, January 13th, 2022

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்திகை நடத்தப்பட்டதாக சட்டத்தரணி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதற்கு அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்த விவாதம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: