ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை – அமைச்சர் விமல் வீரவங்ச வலியுறுத்து!

உலக வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் எமது நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
2020ஆம் நிதியாண்டின் அரச சேவைக்கான இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நேற்றைய தினம் ஆரம்பமானது. இவ்விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவங்ச சடலங்களை புதைப்பா? தகனமா? என்று வேறுபடுத்தி பார்ப்பதற்கு இது நேரமல்ல மக்களுக்கு மத்தியில் கொரோனா பரவாமல் தடுத்தது குறித்து பார்க்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றினூடாக இனவாத அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர். இறந்தவர் புதைக்கப்படுகிறாரா? தகனம் செய்யப்படுகிறாரா? என்று பாராது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது குறித்து சிந்திக்க வேண்டும்
முஸ்லிம் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டதால் 5 இலட்சம் பேர் வேதனையில் இருப்பதாக ஒருவர் சபையில் கூறினார். கிராமங்கள் மூடப்பட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. இது குறித்து சிந்திக்க வேண்டும். கெரரோனா வைரஸ் தொற்றுடன் இனவாத அரசியல் செய்ய முயல்கின்றனர். ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை என்றும் அமைச்சர் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்’ளமை குகறிப்பிடத்தக்கது
Related posts:
|
|