ஒன்பதாம் திகதி நள்ளிரவுமுதல் தொடருந்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்!

Thursday, April 4th, 2019

தொடருந்து தொழிற்சங்கமானது எதிர்வரும் ஒன்பதாம் திகதி நள்ளிவு முதல் இரு தினங்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை தொடருந்து இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்தக தொடங்கொட தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டமானது சம்பள பிரச்சினையை முன்வைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த போராட்டத்தில் தொடருந்து நிலைய அதிபர்கள்இ சாரதிகள்இ காவலர்கள்இ கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொடருந்து கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்டோர் இணையவுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் 14ஆம் திகதியன்று தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சித்திரை புத்தாண்டை கொண்டாடவுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தொழில் நிமித்தம் வேறு மாவட்டங்களில் குறிப்பாக கொழும்பில் வசிக்கும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தமது சொந்த இடத்திற்கு செல்வார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் தொடருந்து பயணிகளாக காணப்படுகின்றனர். அத்துடன் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்படவுள்ள நிலையில் சுற்றுலாக்காகவோ அல்லது சொந்த இடங்களுக்கு செல்வதற்காகவோ தொடருந்தில் பயணிக்கும் நாட்டு மக்கள் அனைவரும் இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: