ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

Thursday, June 15th, 2017

அசாதாரண காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை மீண்டும் நடத்துவதற்கான திகதிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை ஜூலை மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்காக வேண்டி, 93953 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி சாரதி ஆலோசகர்களை பதிவு செய்வதற்கான எழுத்துப் பரீட்சை ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறிப்பிட்டுள்ளது.

Related posts: