ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று!

Tuesday, October 9th, 2018

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அமைவாக, அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவூட்டும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று(09) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிகவுள்ளர்.

அடுத்த வருடத்திற்கான கடனை மீள செலுத்துவதற்கு 2057 பில்லியன் செலவாகுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைய அதிவேக நெடுஞ்சாலை செயற்றிட்டங்களுக்காக 175 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்குக 306 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சு ஒன்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிகூடிய நிதி இதுவென நிதி மற்றும் ஊடக அமைச்சு கூறுகின்றது.

அதேநேரம், மாகாணசபைகளில் அன்றாட செலவிற்காக 221 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டுப் பிரேரணைக்கு அமைவாக, அடுத்த வருடத்தின் அரசாங்கத்தின் முழு செலவாக 4,376 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts: