ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிடாதது கல்வியமைச்சரின் இயலாமை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

Wednesday, November 16th, 2016

கடந்த வரவு – செலவு திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படாமையானது கல்வியமைச்சரின் இயலாமையை வெளிக்காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்:

ஒதுக்கப்பட்ட நிதியை கல்வியமைச்சர் செலவிடாதமை தவறு. இதன் மூலம் அவர் கல்வியமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் என்பது புலனாகிறது. இந்நிலையில் நிதியமைச்சரின் கூற்று தவறு என கல்வியமைச்சர் கூறுவாராயின் இதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் அல்லது தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

ceylonteachersunion

Related posts: