ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை பயன்படுத்துவது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகள் குறித்தோ அல்லது பக்க விளைவுகள் குறித்தோ பதிவாகவில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் இந்த தடுப்பூசி ஏற்றப்பட்ட இரண்டு பேர் திவுலப்பிட்டியில் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்தனிபெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இந்த இருவரும் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் இந்த இரண்டு மரணங்களும் கொவிட் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி காணமாக உயிரிழந்தனரா அல்லது வேறும் காரணிகளினால் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்து தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த இரண்டு மரணங்களும் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் காரணமாக நிகழ்ந்தது என்பதற்கான விஞ்ஞானபூர்வ சான்றுகள் எதுவும் இதுவரையில் உறுதியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அஸ்ட்ராசென்கா தடுப்பூசி பயன்பாட்டை சில நாடுகள் இடைநிறுத்தியுள்ள நிலையில் இலங்கையில் இந்த தடுப்பூசி தொடர்ந்தும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|