ஒக்ரோபரில் தேசிய வாசிப்பு மாதம்!

Wednesday, July 25th, 2018

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் தேசிய நூலக மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை இவ்வாறு அறிவித்துள்ளது.

நாட்டில் செயற்படும் பொது நூலகங்களில் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய செயற்றிட்டங்களை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.

நடுவண் கல்வி அமைச்சின் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினர் பொதுமக்களுக்கும் நூலகங்களுக்கும் இடையில் நல்லுறவைப் பேணும் வகையில் தேசிய நூலக மாதத்தை அறிவித்துள்ளனர்.

அந்த மாதத்தில் முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் வாசகர்களிடம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

உள்ளுராட்சி சபைகள் நடத்தும் பொது நூலகங்களில் தேசிய நூலக மாதத்தில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கமைய சிறந்த நூலகங்கள் மற்றும் சிறந்த நூலகர்கள் தெரிவு வருடாந்தம் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்படவுள்ளனர். உள்ளுராட்சி சபைகள் நடத்தும் பொதுநூலகங்கள் தேசிய வாசிப்பு மாதத்தில் பல்வேறு செயற்றிட்டங்களையும் போட்டிகளையும் நடத்தி போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு இறுதிநாள் நிகழ்வில் பரிசில்கள் வழங்கி மதிப்பளிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: