ஒக்ரோபரில் இளைஞர் யுவதிகளுக்கான தேசிய மட்டத்திலான தொழில் சந்தை!

Tuesday, September 14th, 2021

நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான தேசிய மட்டத்திலான தொழில் சந்தை ஒன்றை ஒழுங்கு செய்ய மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் அடுத்த மாதம் ஏழாம் திகதிமுதல் 9 ஆம் திகதி வரை இந்த தொழில் சந்தை இடம்பெறவுள்ளது.

நாட்டின் 14 மாவட்டங்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிகியுள்ளன..

அத்துடன் பல்வேறு துறைகளில் அதிக அளவிலான தொழில் வாய்ப்புக்கள் தற்சமயம் காணப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: