ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என சுகாதார அமைச்சர் நம்பிக்கை / ஜனாதிபதி நாடு திரும்பியதும் ஊரடங்கு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021

ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன.

இந்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாடு திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் நாட்டை மீண்டும் திறப்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்குவார் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த புத்தாண்டு காலத்தைப் போல அடுத்து வரும் ஏப்ரல் வசந்த காலத்தில் செயற்பட வேண்டாம் என்றும் அவ்வாறு செயற்பட்டால் மீண்டும் ஒரு கொரோனா அலை வருவதை தடுக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சியளிக்கும் வகையில் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறையுமென்று எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம் நாட்டைத் திறக்க சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப் பட்டு வருவதாகவும், நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 50 வீதமானோர் மாத்திரம் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: