ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் 14 ஆம் திகதிவரை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Sunday, September 29th, 2024தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை சமர்ப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சை பெறுபேறுகளைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களுக்குப் பிரவேசித்து பரீட்சார்த்திகளின் சுட்டெண்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேநேரம், onlineexams.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக, சகல அதிபர்களுக்கும், தமக்கான பயநர் பெயரைப் பயன்படுத்தி பாடசாலைகளின் பெறுபேறு அட்டவணையைத் தரவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
அரசாங்க அதிபர் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றி...
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49 ஆவது நினைவேந்தல் நாளை!
சாரதியின் அசமந்த போக்கு - மாங்குளம் - பனிச்சம்குளம் பகுதியில் கோர விபத்து - 3 பேர் உயிரிழப்பு!
|
|