ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதிக்குள் பூர்த்தி – அமைச்சர் அர்ஜூன!

பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 10 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்தவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த விமானநிலைய பணிகளை பார்வையிடுவதற்காக குறித்த பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பலாலி விமான நிலையத்துடன் தொடர்புடைய தொழில்வாய்ப்புக்களை வழங்கும் போது வடமாகாணத்தில் உள்ளவர்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மதிப்பீட்டுக்குழு கூட்டத்தின் போது பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கும்!
23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று!
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி விவகாரம் - அச்சமரமய தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின...
|
|