ஒக்டோபர் மாதம் வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி கிடை வாய்ப்பில்லை – நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் தெரிவிப்பு!

நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு கடன் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது தவறான நிர்வாகம், வரி குறைப்பு மற்றும் உரப்பிரச்சினை போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டது.
இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரேன் யுத்தம் காரணமாக இந்நிலைமை மேலும் மிக மோசமடைந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ரஷ்யாவிடம் இருந்து அதிக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை தற்போது பல நாடுகளின் உதவியை நாடியுள்ள நிலையில், சீனாவிடம் இருந்து மேலும் நிதி உதவிகளை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் உக்ரைன் நெருக்கடியின் தாக்கம் காரணமாக இவ்வருட இறுதிக்குள் உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என பிரதமர் எச்சரித்துள்ளார்.
பொருளாதார மீட்சிக்கு தேவையான திட்டங்கள் என்னவென்பதை அடையாளம் காண்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|