ஒக்டோபர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 77 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

Wednesday, October 25th, 2023

ஒக்டோபர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 77 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த மாதம் 77,763 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

மேலும் ஒக்டோபர் மாதத்திலும் 20,369 இந்திய பிரஜைகள் வந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இதற்கிடையில், ரஷ்யாவில் இருந்து 7,089 நபர்களும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,287 பேரும், ஜேர்மனியில் இருந்து 4,923 பேரும், சீனாவில் இருந்து 4,711 பேரும்,அவுஸ்திரேலியாவில் இருந்து 3,532 பேரும், மாலைத்தீவில் இருந்து 3,155 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதம் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 1,094,019 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: