ஐ.ம.சு.கூ அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

Monday, February 19th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினம் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றைய தினம் பிற்பகலில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. அரசாங்கத்தின் எதிர்காலம் பற்றி ஜனாதிபதிக்கும், சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர், இவ்வாறு அவசர கூட்டமொன்றை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: