ஐ. ம. சு. கூட்டமைப்பின் அமைச்சரவையிலும் மாற்றங்கள்?

Sunday, February 25th, 2018

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் நாட்டிலேற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நார்பான அமைச்சரவையில் இன்றையதினம் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தது.

இதன்பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சரவையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களில் அந்த மாற்றங்கள்  மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: